குரங்கினால் பரிதவித்து நின்ற மனிதர்! பெண்ணின் செயலால் மயங்கிய குரங்கு
குரங்கு ஒன்று படியில் நடந்து கொண்டிருந்த நபரின் கண்ணாடியை பிடுங்கி வைத்துக்கொண்டு சேட்டை செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக குரங்குகள் என்றாலே அதன் சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
ஆனால் குரங்குகளுக்கும் தாய்பாசம் என்பது அதிகமாகவே இருக்கும் என்பதை சமீபத்தில் காணொளியில் அவதானித்தோம். இந்நிலையில் குரங்கு ஒன்று நபர் ஒருவரின் கண் கண்ணாடியை பிடுங்கி வைத்துக்கொண்டு சேட்டை செய்துள்ளது.
குறித்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த தருணத்தில் பெண் ஒருவர் குரங்கின் கையில் சாப்பிடும் பொருட்களை கொடுத்து குறித்த கண்ணாடியை லாவகமாக எடுத்து வந்துள்ளார்.
நாங்களே பெரிய கொரங்கு... pic.twitter.com/GogWN5Wl7P
— நாடு எங்கபோகுது? (@Piramachari) May 23, 2023