கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு... வயிறு குழுங்க குழுங்க சிரிக்க வைத்த காட்சி
குரங்கின் உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு உதைவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை டாக்டர்.சம்ரத் கவுடா ஐஎப்எஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு தாய் குரங்கு தனது மடியில் ஒரு குட்டி குரங்கை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு உணவை கையில் வைத்து ருசித்து கொண்டு இருக்கின்றது.
Chal hatt.... pic.twitter.com/VQg5AlP8NT
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) March 7, 2022
அதன் அருகில் மற்றொரு குரங்கும் அமர்ந்துகொண்டு உணவை ருசித்து தின்றுகொண்டு இருக்கின்றது.
அருகில் இருந்த அந்த மற்றொரு குரங்கின் உணவு முடிந்து போனதும் , அந்த குரங்கு தாய் குரங்கின் கையில் இருந்த உணவை பறிக்க முயல்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் குரங்கு, தனது உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு ஓங்கி ஒரு உதைவிட, அந்த குரங்கு சுருண்டு விழுகிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் சிரிக்கும் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.