என்னமா! காய்கறிகள் உடைக்கிறது இந்த குரங்கு: வியந்து நிற்கும் இணையவாசிகள்
காய்கறிகளை வேக வேகமாக உடைத்து பாத்திரத்தில் போடும் குரங்கின் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விலங்குகளின் வைரல் வீடியோக்கள்
சமீப காலம் தொட்டு இணையத்தில் அதிகமாக விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும், சில வீடியோக்கள் வியக்க வைக்கும், இன்னும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கின்றன.
மனிதர்களைப் போல், விலங்குகளும் தங்களின் அன்பையும் கோபத்தையும் சில நேரங்களில் வெளிப்படுத்தி விடுகிறது.
மேலும் இவைகளின் அப்பாவித்தனமும், குறும்புத்தனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன்படி, அழகான குரங்கு ஒன்று அவசர அவசரமாக காய்கறிகளை சமையலுக்கு உடைத்து போடுகிறது.
குரங்கின் அட்டகாசம்
இந்த குரங்கின் செயல் அங்கிருந்தவர்கள் பலரை வியக்க வைத்துள்ளதுடன், இந்த குரங்கு வருடக்காலத்திற்கு இந்த வேளையை செய்து வருகிறது போல் தெரிகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை scribbler__hephzii என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த வீடியோக்காட்சியை இணையவாசிகள் பலர் வைரலாக்கி வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னமா? காய்கறிகள் உடைக்கிறது இந்த குரங்கு” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.