வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? கடன் தொல்லை ஓட இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்க
எவ்வளவு வேகமாக பணம் கைக்கு வருகிறதோ அதே வேகத்தில் கையில் இருந்து பணம் கரையும் நிலை நம்மில் பலருக்கு ஏற்படுகின்றது.
நாம் கஷ்டப்பட்டு எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென சம்பாதிக்கும் பணம் கையில் நிலைக்காமல் இருந்தால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
ஆனால் ஜோதிடத்தில், இந்த மாதிரியான பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன.
அதை சரியாக செய்து வருவதன் மூலம் பணம் கையில் நிலைத்திருக்கும்.

41 நாள் பரிகாரம்
பௌர்ணமி நாளன்று ரூபாய் தாளை எடுத்து, அதில் சிவப்பு கயிற்றினை கட்டி, அதை ராதா-கிருஷ்ணன் படம் அல்லது சிலைக்கு பின் மறைத்து வைக்க வேண்டும்.
பின் உங்கள் விருப்பத்தை இறைவனிடம் கூற வேண்டும்.
இப்படி தொடர்ந்து 41 நாட்கள், ரூபாய் தாளை எடுத்து வைத்து விருப்பங்களை கூறுங்கள்.
இதில் ஒரு நாள் கூட தவறு ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம், கடவுள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார். அதோடு வீட்டில் பணமும் நிலைத்திருக்கும்.