இத்தாலி பிரதமரை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த மோடி! அப்படி என்ன சொன்னார்?
பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தின் போது, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ஒரு பாக்கெட் மெலோடி டாஃபியைப் பரிசளித்துள்ளார்.

பிரதமர் மோடி
ஒரு சாதாரண மெலடி டாஃபி பாக்கெட், திடீரென இணையத்தில் அதிகம் பேசப்படும் பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலி பயணத்தின்போது, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பார்லே ப்ராடக்ட்ஸின் பிரபலமான கேரமல் மற்றும் சாக்லேட் மிட்டாயைப் பரிசளித்துள்ளார்.

இதற்கு இத்தாலி பிரதமர் தனது நன்றிகளை சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து கூறியுள்ளார்.
அந்த காணொளியில் மெலோனி, "பிரதமர் மோடி மிகவும் சிறந்த டாஃபியை (காப்பி மிட்டாய்) பரிசாக கொண்டுவந்துள்ளார்" என்ற சொல்ல, பிரதமர் மோடி உடனே, "Melody" என்பார். உடனே இருவரும் கலகலப்பாக சிரித்துள்ளனர்.

இதற்கு காரணம் மோடிக்கும், மெலோனிக்கும் இடையேயான நட்புறவை வழக்கமாக இணையத்தில் 'Melodi' என்றே குறிப்பிடுவார்கள். இதன் காரணமாக தான் தற்போது இந்த காணொளி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
Il rapporto tra India e Italia ha ormai raggiunto una fase decisiva. Negli ultimi anni, i nostri legami si sono ampliati con uno slancio senza precedenti, evolvendo da una cordiale amicizia a un partenariato strategico speciale fondato sui valori di libertà e democrazia, nonché… pic.twitter.com/pSjHkFvdcX
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the… pic.twitter.com/df0bDYKCdU
— Narendra Modi (@narendramodi) May 20, 2026