இது சூப்பரா இருக்கே! இணையத்தை ஆக்கிரமிக்கும் நவீன தாலி... ஷாக்கான நெட்டிசன்கள்
மேற்கத்தேய நாட்டில் வசிக்கும் தமிழ் பெண்ணொருவர் நவீன கலாசாரத்துக்கு பொருந்தும் வகையில் தனது தாலியை வடிவமைத்துள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக தமிழ் பெண்களை பொருத்தமட்டில் திருமணத்தின் போது தாலி கட்டுவது ஒரு சடங்காக பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் பெண்கள் அந்த தாலியை ஒரு போதும் கழற்றி வைக்கவே கூடாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
பெண்ணுக்கு தாலி என்பது மனைவி என்ற அங்கிகாரம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்ப்பதாக பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள்.

இது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கலாம். தங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், குடுபத்துக்காகவும், சமூகத்துக்காகவும் இன்றளவு தாலியை கழற்றாத பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தாலியை கழற்றுவது கணவருக்கு ஆபத்து என்பதை நம்பும் பெண்களும் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அந்தவகையில், தாலியை எப்போதும் அணிந்துக்கொண்டே இருப்பதற்கு ஏற்ற வகையில், தனது தாலியை நவீன முறையில் வடிவமைத்து பெண்ணொருவர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்து.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |