எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை!
நாம் வாழ்வதற்கு உணவு முக்கியமானது. அப்படி உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆரோக்கிய உணவு என்றால் காய்கறி, பழங்கள் மட்டும் அல்ல. தானியங்களும் உள்ளடங்குகின்றது.
மொச்சைக் கொட்டையும் எனது உடலுக்கு தேவையான அத்தனை நல்ல குணங்களும் உள்ளது. மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன.
மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது.
நன்மைகள்
மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.
மொச்சைக் காயை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ இருக்கிறது.
மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.
மொச்சக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சாப்பிட்ட உணவை உடனே செரிமானம் ஆகச் செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கு மொச்சைக் கொட்டை உதவுகிறது.
உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பெருங்குடலில் புற்றுநோய் மற்றும் மார்ப புற்றுநோய் வராமல் தடுக்கும். இரத்த சிவப்பணு அணுக்களை அதிகரிக்க உதவும்.
யார் யார் உண்ணவேண்டும்
மொச்சக்கொட்டையை சக்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் உண்ணக்கூடாது.
அதேபோல், சிறுநீகரத்தில் கல் உள்ளவர்கள், வாதம் மற்றும் ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் சம்பந்தமான வேறு வியாதி உள்ளவர்கள் மொச்சைக்கொட்டையை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.