மலச்சிக்கல் ஏற்படுகிறதா? சாதாரணமாக நினைக்க வேண்டாம்
நாம் சாப்பிடும் உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் காரணியே மலம்.
காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற நிலையில் எழுந்திருப்பவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று அர்த்தம்.
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல்,
மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம்.
இதுமட்டுமல்ல, ஒருநாளைக்கு 5 அல்லது 6 முறை மலத்தை வெளியேற்றுவது கூட மலச்சிக்கல் தான்.
இதற்கான காரணங்கள் என்ன? இயற்கையான வாழ்வியல் முறையில் சரிசெய்வது எப்படி? எனபல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் மருத்துவர் கௌதம்.