அட்டகாசமான சுவையில் அவித்த மீன்! புரதச்சத்து தாறுமாறாக அதிகரிக்கும்
கடல் உணவுகளில் ஒன்றான மீன் இன்று அசைவப் பிரியர்களின் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. மீனை கொழுப்பு சத்து குறைவாகவும், புரதம் மிகுதியாகவும் எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அவித்த மீன் செய்ய தேவையான பொருட்கள்
மீன் - 2
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - ஒன்று
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
வாழையிலை - ஒன்று
ஜாதகத்தில் சனி தோஷமா? செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
செய்முறை
முதலில் மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைப்பழ சாறு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீன்களை, இந்த கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
நன்கு ஊறிய பின்பு, அந்த மீனை எடுத்து வாழையிலையில் வைத்து மடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி அடுப்பை 25 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.
தற்போது கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம் மிகுதியாகவும் உள்ள நல்ல உணவான அவித்த மீன் தயார்.
நொடியில் நடந்த சோகம்... திடீரென உருண்டு வந்த பாறை: உயிரிழந்த இளைஞர்