செல்போனை கடித்து தின்ற இளைஞர்! பகீர் காரணம் இதோ
சிறையில் இருந்த இளைஞர் ஒருவர் செல்போனை கடித்து தின்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
கைதியாக இருந்த இளைஞர்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்சை சேர்ந்தவர் குவாஷிகர் அலி. இவர் கடந்த 2020ம் ஆண்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறையில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது கைதிகளிடமிருந்து செல்போன் மற்றும் போதை பொருட்கள் இவைகள் கைப்பற்றப்பட்டு, தவறு செய்த கைதிகளுக்கு தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எழுந்த குற்றச்சாட்டு
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அந்த சிறையில் சோதனை நடத்திய போது குவாஷிகர் அலியிடம் செல்போன் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
அப்பொழுது பொலிசாரிடம் சிக்காமல் இருக்க குறித்த இளைஞர் திடீரென மொபைல் போனை கடித்து விழுங்கியுள்ளார். பின்னர் அடுத்த நாள் குவாஷிகர் அலிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அலறித்துடித்த அவரை சிறை காவலர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த போது, அவரது வயிற்றில் செல்போன் உதிரி பாகங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள்... மேலும் விரைவில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளனர்.