மனுவுடன் தங்கச்செயினை அனுப்பிய பெண்... ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்
மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்ததுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது என்றும் பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
மேலும் சௌவுமியாவின் மனுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார். அதில், உள்ளே கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் செயினை வைத்துள்ளேன் என்று சௌவுமியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆவின் ஓய்வு பெற்ற பணியாளரான தனது தந்தை இறப்புக்கு பின்பு குடும்பம் போதிய வருமானம் இன்றி தவித்து வருவதாகவும், பி.இ. கம்யூட்டர் சைன்ஸ் பட்டதாரியான தனக்கு தனியார் நிறுவனத்திலாவது வேலை வாங்கி தருமாறு செளவுமியா கோரி உள்ளார்.
இந்த வேலைவாய்ப்பை, உடல்நலக்குறைவால் இறந்த தனது தாயே மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக உருக்கத்துடன் மனுவில் சௌவுமியா குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
— M.K.Stalin (@mkstalin) June 13, 2021
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். pic.twitter.com/Ioqt6dq5YU