சைக்கிளில் சென்ற தமிழக முதல்வர் செய்த தவறு: சர்ச்சையை ஏற்படுத்திய செயல்
சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகிய நிலையில், அவர் முகக்கவசம் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிள் பயிற்சியை விடாமல் செய்து வருகிறார்.
முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி அதே போன்று சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவருடன் சில நண்பர்களும் உடன் சென்றனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது அதில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
ஆம் அன்றைய தினம் அவர் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருடன் சென்றவர்கள் யாரும் முக கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டி வந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ஏன் யாரும் முகக்கவசம் அணியவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
