இணையத்தில் வைரலாகும் முதல்வர் ஸ்டாலினின் காணொளி: கலக்கத்துடன் கூறியது என்ன?
கொரோனா விழிப்புணர்வு காணொளி ஒன்றினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏக்கத்துடனும், கலக்கத்துடனும் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பயங்கரமாக தாக்கி வரும் நிலையில், தமிழகத்தின் நிலையும் மோசமாக சென்றுள்ளது.
ரெம்டெசிவர், ஆக்ஸிஜன், படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் என இல்லாமல் மக்களின் இறப்பு அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பதிவியேற்றுள்ள திமுக அரசு பல முயற்சிகளையும், மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றது.
மேலும் தமிழகத்திலிருந்து கொரோனாவை விரட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மாஸ்க் எப்படி அணிவது, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சிக்கலா?, சானிடைஷைரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மிகவும் அழகாக காணொளியில் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார்.
10 ஆண்டிற்கு பின்ப அரியணையில் ஏறியிருக்கும் திமுக அரசின் தற்போது நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருவது மட்டுமின்றி ஆறுதலாகவும் இருந்து வருகின்றது.
முகக்கவசம் அணியுங்கள்!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்! pic.twitter.com/bPcBrg1Q8E