கலைஞர் பிறந்தநாளில் சமாதியில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன தெரியுமா? தழுதழுத்த குரலில் முதல்வர் வெளியிட்ட காட்சி
மறைந்த முன்னாள் திமுக முதலமைச்சரும், தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளான இன்று அவரது சமாதியில் எழுதப்பட்டுள்ள வாசகம் வைரலாகி வருகின்றது.
மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
1924 ஜூன் 3 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார்.
தந்தை பெயர் முத்துவேலர், தாயார் அஞ்சுகம். கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.
அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறிமாறி பார்த்த அரசியல் ஆளுமைகளில் கருணாநிதியை போன்று எவருமில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் இவரது பிறந்தநாளான இன்று, சமாதியில் போராளியின் வழியில் தொடரும் வெற்றிப்பயணம் என்ற வாசகம் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றது.

கொரோனா காலகட்டம் என்பதால், தொற்று பரவலை கருத்தில்கொண்டு பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். கொரோனா நிவாரண நிதியாக இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் மற்றும், மக்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஒருபுறம் கருணாநிதியின் சமாதியில் வாசகம் வைரலாகி வரும் நிலையில், மற்றொரு புறம் தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “தலைநிமிர்ந்து வருகிறேன்” என்று தான் பேசிய காணொளியினை வெளியிட்டுள்ளது வேறலெவல் என்றே கூறலாம்.
ஆம் தந்தையின் ஆசையின் படி தற்போது முதலமைச்சராக அரியணையில் ஏறியிருப்பதையும், இந்த நாளில் வெற்றி செய்தியுடன் தங்களை தேடி வருகிறேன்.. வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே...என்று காணொளியினை முடித்துள்ளனர். ஸ்டாலின் வெளியிட்டுள்ள இக்காட்சி காண்பவர் கண்களை கலங்க வைத்துள்ளது.
தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u
— M.K.Stalin (@mkstalin) June 3, 2021