உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானம்: எப்படி தயாரிக்கணும்
பூசணிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. இதை உணவு கட்டுபாட்டில் உள்ளவர்கள் தினமும் உணவுடன் எடுத்து கொள்ளலாம்.
உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் இந்த பானம் மிகவும் நன்மை தரும். இதில் குறைவான கொழுப்புச்சத்தே காணப்படுகின்றது.
அதனால் இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம், இதனால் நமது இதய ஆரோக்கியம் நல்லதாக இருக்கும். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்கும்.
இவ்வளவு ஆரோக்கியமான குணநலங்கள் கொண்ட பூசணிக்காயில் பானம் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண் பூசணி – ஒரு கீற்று
- கறிவேப்பிலை – 10
- மல்லித்தழை – சிறிதளவு
- மிளகு – 10
செய்யும் முறை
வெள்ளை பூசணிக்காயை சுத்தம் செய்து எடுத்து அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.
இதன் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இதனுடன் தேன் அல்லது உப்பு சேர்த்து குடிக்கலாம்.
இந்த பானம் உடலில் தங்கியிருக்க கூடிய நாள்பட்ட நச்சுக்கள், கொழுப்பு, கெட்ட நீர், கெட்ட கொழுப்பு என அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
இதை தொடர்ந்து 15 நாட்கள் பருகி வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் இந்த பானத்தை தாராளமாக குடித்து வரலாம். இதை குடிப்பதால் உங்களுக்கு எந்தவித பக்கவிளைவும் வராது.