மீனின் கண்களை சாப்பிடுவது நல்லதா?
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.
மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
அந்த வகையில் நாம் மீன்களில் எவ்வாறான சத்துக்கள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்கள்
கடைகளில் மீன் வாங்கும் போது நீங்கள் அதன் தலையை வெட்டி வீசிவிட்டு வாங்குகிறீர்களா? மீன்களின் முட்டைகளிலும் மீனின் தலைகளிலும் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன.
மீன் தலைகளில் பல வைட்டமின்களும், பல தாதுக்களும் புரதங்கள் ஆரோக்கிமான கொழுப்பு நிறைந்துள்ளது.
நாம் எவ்வளவு இறைச்சி வகைகளை சாப்பிட்டாலும் இதில் இல்லாத சத்துக்கள் மீன் தலைகளில் இருக்கும்.
மீன்களின் கண்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள் என பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கு தேவையான கொலாஜன் புரதத்தை வழங்குகின்றன.
இந்த புரதம் கால் மூட்டு மற்றும் நகங்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கி அவற்றை பாதுகாக்கிறது.
இதனால் மீனின் கண்களை உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான கொலாஜன் கிடைக்கும்.
கண்பார்வை பிரச்சனை இருப்பவர்கள் மீனின் கண்ணை சாப்பட்டு வருதல் நல்லது. இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் கண்பார்வைக்கு உதவியாக இருக்கும்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக் ஒன்றி நடத்தப்பட்ட ஆய்வில் இது புற்று நோய் வரும் அபாயத்தை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எப்போது மீன் வாங்கினாலும் மீனின் முட்டைகளையும் மீனின் கண்களையும் சாப்பிடுதல் நல்லது.