யூடிப் மூலம் மிஸ்டர் பீஸ்ட் 6 ஆண்டுகளில் உச்சம் தொட்டது எப்படி?
பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் 6 ஆண்டுகளில் புதிய உச்சம் தொட்டுள்ளதற்கான காரணத்தை தொடர்ந்து இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.
யூடிப்
மக்களின் சுவாரஸ்சியமான பொழுதுபோக்கு சமூக வைலத்தளமாக காணப்டுவது யூடிப் தலமாகும்.இதில் இல்லாத விஷயங்களே இல்லை.
நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றாலோ, தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அதற்கு நிச்சயமாக யூடியூபில் விடை கிடைக்கும்.
மேலும், யூடியூபில் சேனல் ஒன்றை தொடங்குவது ஒன்றும் பெரிய காரியமில்லை என்பதால், ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி, அதில் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் பல ரசிகர்களை கொண்ட ஒரு தலமாக விளங்குவது இசை நிறுவனமான T-Series தான்.டந்த 2006ஆம் ஆண்டு யூடியூப்பில் இணைந்த டி-சீரிஸ் நிறுவனத்திற்கு தற்போது 26.6 கோடி சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.
இப்படி பல ஆண்டுகளாக முதலிடத்தில் கோலோச்சி வந்த டி-சீரிஸை மிஞ்சி, அமெரிக்காவைச் சேர்ந்த “மிஸ்டர் பீஸ்ட்” என்ற யூடியூப் பக்கம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கான காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் 2012ஆம் ஆண்டு தொடங்கிய “மிஸ்டர் பீஸ்ட்” யூடியூப் சேனலில் இதுவரை 798 வீடியோக்களை மட்டுமே பதிவிட்டுள்ளார்.
ஆனால், ஒவ்வொரு வீடியோவும் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்படி பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ள இந்த யூடியூப் பக்கத்தை இதுவரை 26.9 கோடி பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.