முட்டையை சுவை மாறாமல் சமைப்பது எப்படி? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக முட்டை என்றால் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முட்டையை வைத்து முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், மிளகு முட்டை, முட்டை வறுவல், முட்டை பொரியல் என ஏகப்பட்ட வகைகள் செய்யலாம்.
இவ்வாறு ஒவ்வொரு தடவையில் முட்டையை சமைக்கும் போது ஒவ்வொரு சுவைக் கொடுக்கும் இதனை நன்றாக கவனித்து பார்த்தால் நன்றாக விளங்கும்.
இந்த மாற்றம் நாம் விடும் சிறிய சிறிய தவறுகள் காரணமாக ஏற்படுகின்றது.
அந்த வகையில் முட்டையை சமைக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய சில தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டையை சமைக்கும் பொழுது விடும் தவறுகள்
Image - First For Women
1. முட்டை தண்ணீரில் போட்டு அவிக்கும் பொழுது அதன் வடிவம் மற்றும் சுவையில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனை தடுக்க வேண்டும் என்றால் முட்டையை சரியான நேரத்தில் வெளியில் எடுத்து விட வேண்டும்.
2. முட்டையை சமைக்கும் முன்னர் வாணலியை முன்பே கொஞ்சமாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சூடாக்காமல் முட்டையை வாணலிியில் ஊற்றும் பொழுது முட்டை வாணலியில் ஒட்டி கொள்ள அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன.
3 ஆம்லெட் சமைக்கும் பொழுது எப்பொழுதும் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். ஏனெனின் முட்டைகளை பொறுமையாக சமைப்பது அவற்றின் மென்மை தன்மையை பராமரிக்க அவசியமாகும்.
4. முட்டைகளை வேக வைக்கும் பொழுது நேரடியாக அவற்றை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கக்கூடாது. இது அதன் சுவையிலும் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் குளிர்ந்த நீரிலிருந்து மெல்ல மெல்ல தான் வேக விட வேண்டும்.
5. முட்டையை சமைக்கும் பொழுது உலோக பாத்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மாறாக சிலிக்கான், நைலான், அல்லது மர பாத்திரங்களை முட்டைகள் சமைக்க பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |