வறுமையை நீடிக்கச் செய்யும் தவறுகள்: மாலை நேரத்தில் இத மட்டும் செய்யாதீங்க
தற்போதும் நம்மில் பலர் வாஸ்து சாஸ்த்திரங்களை நம்புகிறார்கள்.
வீட்டில் உள்ள அனைத்து விடயங்களிலும் வாஸ்துப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் நிம்மதி கிடைக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு புது கட்டுவது முதல் அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதனை கூட வாஸ்து தான் முடிவு செய்கிறது.
அந்த வகையில், வீட்டில் வைத்திருக்கக் கூடாத விஷயங்கள் பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதை தவறும் பட்சத்தில் லக்ஷ்மி வரவு, ஆரோக்கியம், வருமானம் இப்படி அனைத்திலும் பிரச்சினை வரக்கூடும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, எந்த சூழ்நிலையிலும் சில செயல்களை மாலை வேளையில் செய்யக்கூடாதாம். அப்படியான தவறுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மாலை நேரங்களில் செய்யக் கூடாத தவறுகள்
1. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டிலுள்ள பெண்களை மாலை வேளைகளில் திட்டக்கூடாது. மாலை வேளையில் பொதுவாக வீடுகளில் விளக்கு வைப்பார்கள். இந்த நேரங்களில் பெண்களின் மனம் மகிழ்ச்சியாக இருப்பது வீட்டிற்கே மகிழ்ச்சியை கொடுக்கும்.
2. மாலை நேரத்தில் பெண்களை துன்புறுத்தி, பழி சுமத்தினால் லட்சுமி தேவிக்கு கடும் கோபம் வரும் என கூறப்படுகிறது. அவர் கோபம் கொண்டால் வீட்டிற்கான பண வரவு குறையும்.
3. நம்மில் பலர் மாலை வேளைகளில் அசந்து தூங்குவோம். ஆனால் மறந்தும் மாலை வேளைகளில் தூங்கக் கூடாது. முகத்தை நன்றாக கழுவி விட்டு தூங்காமல் வீட்டிலுள்ள மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.
4. வீட்டை சுத்தம் செய்ய விளக்குமாறு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இதனை மாலை வேளைகளில் செய்யக் கூடாது. இப்படி சுத்தம் செய்தால் வீட்டிலுள்ள லட்சுமி வெளியேறி விடுவாள் என்பது ஐதீகம். வீட்டில் விளக்கு வைத்த பிறகு வீட்டில் அனைத்து விதமான நேர்மறையான ஆற்றல்களும் எம்மை வந்து சேரும். இந்த சமயத்தில் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும்.
5. துளசி செடிக்கு மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றக் கூடாது. அதே வேளை துளசி செடியிலுள்ள இலைகள், பூக்கள் மற்றும் காய்களை மாலையில் பறிக்கக்கூடாது. இந்த தவறால் உங்கள் வீட்டிற்கு கஷ்டம் வந்து சேரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |