பூஜையில் விளக்கு அணைந்தால் கெட்ட சகுனமா?
பொதுவாக சிலர் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடுகள் செய்வார்கள்.
காற்று அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் விளக்கு அணைந்து விட்டால் அதனை சிலர் கெட்ட சகுனமாக பார்க்கிறார்கள்.
இப்படி அணையும் பொழுது கெட்டது நடக்கப் போகிறது, துரதிர்ஷ்டம் நடக்கும், ஆசைகள் நிறைவேறாது போன்ற பல கட்டுக்கதைகள் இருக்கிறன. சிலர் காலை, மாலை என இரு வேளைகள் தீபம் ஏற்றி பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதே வேளை, தீபம் ஏற்றாமல் எந்த விதமான மங்கள காரியங்களும் நிறைவடையாது. தீபம் ஏற்றிய பின்னர் சடங்குகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாறு ஏற்றப்படும் தீபம் தானாகவே அணைந்து விட்டால் அது கெட்ட சகுனமா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மை
- தொடர்ந்து விளக்கு வழிபாடு செய்யும் பொழுது வீட்டில் எதிர்மறையான ஆற்றல்கள் இருக்காது.
- தீபம் ஏற்றுவதால் பல வாஸ்து தோஷங்கள் நீங்குவதாக கூறப்படுகின்றது.
- மங்கள காரியங்கள் சுபம் பெறும்.
- தீபம் ஏற்றி வழிபட்டால் புண்ணிய பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.
விளக்கு அணைந்தால் கெட்ட சகுனமா?
சிலர் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென விளக்கு அணைந்து விடும். இது கெட்ட சகுனம் என்பது முற்றிலும் பொய்யான கட்டுக்கதை.
விளக்கு திரியில் போதிய அளவு நெய் அல்லது எண்ணெய் இல்லாததால் தீபம் அணைந்திருக்கலாம். அல்லது காற்று வேகமாக வீசும் போது விளக்கு அணைந்திருக்கலாம்.
எனவே இது குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ள வேண்டாம். கடவுளிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் விளக்கை ஏறிய வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |