இந்திய அணியின் சொதப்பல்... அஷ்வின் இல்லாததது ஏன்? கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்கிலே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளிலும், சரி மூன்றாவது டெஸ்ட்டிலும் சரி ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை... அஷ்வின் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இங்கிலாந்து அணியில் ரோரி பேர்ன்ஸ், டேவிட் மலன், மொயின் அலி மற்றும் சாமி கர்ரன் என நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். இதில் மலன் இந்த போட்டியில் புதுவரவு. பொதுவாகவே இடது கை பேட்ஸ்மேன்களை துரிதமாக அவுட் செய்யும் வல்லமை அஸ்வினிடம் உள்ளது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடது கை பேட்ஸ்மேன்களை அஸ்வின் அவுட் செய்துள்ளார். இதுவரை 211 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவர் வீழ்த்தியுள்ளார்.
கடைசியாக அஸ்வின் விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகளும் இடது கை பேட்ஸ்மேன்கள் தான். டாம் லேதம், வேக்னர் மற்றும் கான்வே ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியிருந்தார்.
இதில் லேதம் இரண்டு முறை அஸ்வினிடம் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதனால், இங்கிலாந்து சூழல் சுழலுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்காது என சொல்வது வழக்கம். அதனால் இந்தியா ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி வருகிறது.
இருப்பினும் அப்படி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இதுவரை ஜடேஜா பெரிய அளவில் ஜொலிக்கவில்லை...
இந்நிலையில், அடுத்தப் போட்டியில் நிச்சயம் இந்தியா ஆடும் லெவனில் மாற்றம் செய்யும். அதில் அஸ்வின் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.