அட மிர்ச்சி சிவா-வா இது? பாலிவுட் படத்தில் என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் மிர்ச்சி சிவாவின் பழைய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் சிவா
ரேடியோ மிர்ச்சியில் அறிவிப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகர் சிவா.
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள சிவா தமிழ்படம், தமிழ்படம் 2.0 படங்களில் நாயகனாக நடித்தத்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
12 பி படத்தில் ஆரம்பித்த அவரது பயணம் கோ, கலகலப்பு, வணக்கம் சென்னை என இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரின் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
மிர்ச்சி சிவா விளையாட்டு வீராங்கனை பிரியா என்பவரை காதலித்து 2012ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
வைரல் காணொளி
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் அனைவருமே ஏதேனும் ஒரு சமயத்தில் படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து தான் தற்போது உச்சத்தில் இருப்பார்கள்.
அப்படி, சிவாவும் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் துணை நடிகராக கூட்டத்தோடு கூட்டமாக நடித்திருக்கிறார். குறித்த காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |