தந்தையான மிர்ச்சி செந்தில்! நெகிழ்ச்சியில் கூறியது என்ன?
சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில், மகனால் தான் பெற்றோராக பிறந்திருப்பதாக நெகிழ்ச்சியான பதிவியினை வெளியிட்டு தனக்கு ஆண்குழந்தை பிறந்ததை அறிவித்துள்ளார்.
மிர்ச்சி செந்தில்
ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். பின்பு சீரியல் வாய்ப்பு தேடிவந்த நிலையில், தனது நடிப்புத்திறமையினால் உச்சக்கட்ட நடிகராக வலம்வருகின்றார்.
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான இவர், சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பரை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தெரிவித்துள்ள செந்தில், பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று.... உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என நெகிழ்ச்சி பதிவினை வெளியிட்டுள்ளார்.
செந்திலின் குறித்த பதிவினை அவதானித்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.