பல இலட்சம் ரூபாய் செலவு செய்து உருமாறிய ஓநாய் மனிதன்! ஆடிப்போய் நின்ற நெட்டிசன்கள்
ஜப்பானில் இளைஞரொருவர் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாய் மனிதனாக உருமாறியுள்ளார்.
மனிதர்களின் ஆசைகள்
பொதுவாக மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதன்படி, தன்னை மாற்றிக் கொள்வதற்கு பல சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
அந்தவகையில் ஜப்பானை சேர்ந்த இளைஞரொருவர் பிரபல்யமான ஆடை வடிவமைப்பாளர்களை வரவழைத்து அசல் ஓநாய் போலவே ஆடையொன்றை பல இலட்சம் செலவு செய்து வடிவமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆடையை அணிந்துக் கொண்டு பின்னாங்காலை அசைப்படி நடந்துக் காட்டிய போது ஓநாயாகவே முற்றாக மாறியுள்ளார்.
உருமாறிய மனிதன்
இதற்காக வடிவமைப்பாளர்கள் சுமார் 50 நாட்கள் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் மகிழ்ச்சியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,“ சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டி.வியில் யாராவது அது போன்று நடித்தால் விரும்பி பார்ப்பேன். நாமும் இது போன்று முயற்சி செய்தால் என்ன என்று நினைத்தேன்.
மேலும், இதற்காக ஓநாய் போன்று வேடமணிய முடிவு செய்தேன். அதற்கு ஏற்றாற்போல நான் சென்ற நிறுவனமும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்து ஆடைகளை தயார் செய்து கொடுத்தனர். அதை எனது உடலில் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றேன்.
எனது உருவத்தை பார்த்து என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. உண்மையான ஓநாய் போன்று இருந்தது. இதனால் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த பலர் வியப்படையும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.