நோய் எதிர்ப்பு சக்தியை நொடிப்பொழுதில் தூண்டும் புதினா ரசம்: மணமணக்கும் ரெசிபி இதோ!
பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிரச்சினை, இருமல், தலைவலி என பல நோய்கள் வரும்.
இவ்வாறு அடிக்கடி நோய் வருவது குழந்தைகளுக்குள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் தான் கொரோனா போன்ற தொற்றுக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் இது போன்ற கொடூர நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு அவர்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- புதினா - 1 கட்டு
- புளிக்கரைசல் - ஒரு கோப்பை
- கீறிய பச்சை மிளகாய் - 2
- வெந்த துவரம் பருப்பு - அரை கோப்பை
- மிளகு, சீரகம், ரசப்பொடி – தலா 2 தேக்கரண்டி
- அளவு தனியா - 1 தேக்கரண்டி
- துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
- அளவு நெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ரசத்திற்கு தேவையான புதினாவை எடுத்து இலைகளாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா ஆகிய பொருட்களை நன்றாக வறுத்து பொடித்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இந்த கலவையுடன் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும். கொதித்துக் கொண்டிருக்கும் புளிக்கரைச்சலில் இரண்டு கோப்பை தண்ணீர் விட்டு, அதில் வேக வைத்த துவரம் பருப்பை கரைத்து சேர்க்கவும்.
இதன்பின்னர் சுமார் 2 நிமிடங்களில் கழித்து ரசம் பொங்கி நுரைத்து வெளியில் வரும். அப்போது நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கினால் சூப்பரான புதினா ரசம் தயார்!