அமைச்சர் ஆதவ் மனைவி வெளியிட்ட அறிக்கை! உறுதியானது விவாகரத்து
Minister Aadhav Daisy Martin Divorce: அமைச்சர் ஆதவ்வை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
அமைச்சர் ஆதவ்
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியில் போட்டியிட்ட ஆதவ் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் நிலையில், இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தனர்.
திருச்சியை சேர்ந்த இவர் சிறுவயதில் அம்மாவை இழந்த நிலையில், தனது பெரியம்மா திலகவதியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். திலகவதி தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார்.
சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்த ஆதவ், தமிழ்நாடு சார்பாக கூடைப்பந்து விளையாட்டராக இருந்துள்ளார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
அரசியலில் 2014ம் ஆண்டு திமுக-விற்கு வேலை செய்த இவர் பின்பு, 2023ம் ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
2025ம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் இருக்கின்றார்.

மனைவி எடுத்த முடிவு
அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் இவர்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது டெய்சி அளித்துள்ள அறிக்கையில், 14 ஆண்டுகளாக அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பயணமாக இருந்துள்ளது. நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும் மற்றும் பெற்றோர்களாகவும் வாழ்வின் பல்வேறு அத்தியாயங்களை கடந்து வந்துள்ளோம்.
ஆனால் இன்று ஆதவ்வும், நானும் வெவ்வோறு பாதைகளில் பயணிப்பதற்கு பரஸ்வராக முடிவெடுத்துள்ளதாகவும், எங்களது புதிய அத்தியாயம் என்றும், நாங்கள் பிரிந்தாலும் பெற்றோர்களாக எங்களது குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதவ் மீது தனக்கு எப்பொழுதும் மரியாதை இருக்கும். அவர் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அவர் எடுக்கும் புதிய முயற்சிகளிலும் எல்லாம் வெற்றி பெறவும் விருப்புவதாக கூறியுள்ளார்.
மேலும் எங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினை புரிந்து கொண்டு தனிமையை கொடுக்க வேண்டும் என்று டெய்சி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |