லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க ஆசையா? இந்த ரகசியத்தை follow பண்ணுங்க
பொதுவாக நாம் அனைவரும் பிரச்சினை இல்லாமல் வாழ தான் விரும்புவோம்.
அதற்கான அடிப்படை தேவையாக பணம் பார்க்கப்படுகின்றது.
தினமும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கான முக்கிய காரணம் உணவு, உடை, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகவே மட்டுமே.
மாறாக நாம் வேலை செய்து வாங்கும் சம்பளம் தேவைகளுக்காகவே மட்டும் பயன்பட்டு விட்டால் சேமிக்க வழியில்லாமல் போய் விடும்.
அதே சமயம், வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப திட்டமிட்டு பணத்தை செலவழித்தால், சேமிப்பை அதிகரிக்க முடியும்.
அந்த வகையில் நாம் வாங்கும் சம்பளத்தை எப்படி அதிகரிக்கலாம்? அதனை எப்படி சேமிக்கலாம்? என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பணம் சேமிக்க டிப்ஸ்
1. பணத்தை சேமிக்க வேண்டுமானால் முதலில் பட்ஜெட் தயார் செய்ய வேண்டும். இதன்படி, செலவு செய்தால் கண்டிப்பாக சேமிக்கலாம்.
2. தேவையற்ற செலவுகளுக்கு தவிர்க்க வேண்டும். தேவைக்காகவே மட்டுமே செலவு செய்ய வேண்டும். இதனை சரியாக செய்தால் உங்கள் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதிலும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம்.
3. தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்து, அதைக் கொண்டு முடிந்தவரை மாதம் முழுவதும் சமாளிக்க முயற்சிக்க வேண்டும்.
4. உங்களுக்கு திருமணம் நடந்து முடிந்து குழந்தைகள் இருந்தால் அவர்களின் அவசர செலவுகளுக்காக ஒரு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும்.
5. வழமையாக வருகின்ற சம்பளத்தை விட உங்களுக்கு சம்பளத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்பட்டாலோ அல்லது பணியிடத்தில் போனஸ் கொடுத்தாலோ அதனை செலவழிக்க திட்டம் தீட்டாமல் சேமித்து வைக்கவும். இப்படி செய்தால் சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வரலாம்.
6.முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்ல பழக்கமாக பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, தேவையில்லாமல் புதிய ஆடைகளை வாங்குவது, பிடித்த பொருட்கள் அல்லது தேவையில்லாத பொருட்களை பார்த்த உடனே வாங்கிவிடுவது போன்றவை இதில் அடங்கும்.
7. பணத்தை அதிகம் சேமிக்க நினைப்பவர்கள்,சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். தபால் நிலையங்களில் நல்ல வட்டியுடன் கூடிய சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றை விசாரித்தும் அவற்றில் முதலீடு செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |