பால் கெட்டுப்போச்சா...? கவலையை விடுங்க... இதை மட்டும் பண்ணுங்க போதும்!
பால் கேட்டுப் போகாமல் இருக்க ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூண்டு முறை அதனை சூடுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், காலநிலை மாற்றம் காரணமாக சில சமயங்களில் பால் கேட்டு போவது உண்டு.
அதனை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பாலை குப்பையில் ஊற்றி விடுகிறார்கள். ஆனால் கெட்டுப்போகும் பாலை வைத்து சூப்பரான இனிப்புகளை வீட்டிலேயே தயார் செய்யலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இனி பால் திரிந்து போகும் நிலையில் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் கவலையே படமா சில இனிப்புகளை செஞ்சு பாருங்க.
கட்டாயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். இனிப்பு பன்னீர் கெட்டுப்போன பாலை அடுப்பில் வைத்து அதில், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு அல்லது வினிகரை சேர்த்து மிதமான தீயில் நன்கு கலக்கவும். 1 முதல் 2 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால், தண்ணீர் தனியாகவும் பன்னீர் கட்டிகள் தனியாகவும் திரண்டு வருவதைக் காணலாம். அதன் பிறகு வெப்பத்தை அனைத்து பாலை வடிகட்டவும். பிறகு அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும்.
இது பன்னீரில் இருந்து வினிகரின் அல்லது எலுமிச்சை வாசனையை அகற்ற உதவும். இதையடுத்து, அதில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேறும் விதமாக நன்கு வடிகட்டிக்கொள்ளுங்கள். இப்பொது ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பன்னீரை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் இனிப்பு பன்னீர் ரெடி. கலகண்ட் உங்கள் கெட்டுப்போன பாலில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, சில நிமிடங்கள் வேகவைத்து பாலில் பன்னீர் கட்டிகள் உருவாகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது, அதிலிருக்கும் தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விடுங்கள். வடிகட்டியபிறகு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் 4 கப் நல்ல பால் சேர்த்து, அது 2 கப் அளவுக்கு வரும் வரை வேகவைக்கவும். பின்னர் வடிகட்டப்பட்ட பன்னீரை சேர்க்கவும். அந்த கலவை கெட்டியாகி, மென்மையான மாவாக மாறும் வரை கிளறவும். இப்போது சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சிறிய கட்டிகள் உருவாக ஆரம்பித்தால், உங்கள் கலக்கண்ட் கலவை தயாராக உள்ளது என்று அர்த்தம்.
அதனை ஒரு வெண்ணை தடவப்பட்ட தட்டில் ஊற்றி பரப்பவும். பின்பு அதை குளிர வைத்து விட்டு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடுங்கள். டோனட்ஸ் ஒரு பாத்திரத்தில் 2 கப் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்த்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, ¼ கப் தூள் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது ஒரு தனி கிண்ணத்தில் 2 முட்டைகளை பீட் செய்து பிறகு அதனுடன் 1 கப் கெட்டுப்போன பால் மற்றும் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது, தனித்தனி பவுலில் இருக்கும் இரண்டு கலவையையும் ஒன்றாக இணைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.
இந்த மாவை 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர், டோனட்ஸ் கட்டர் வைத்து டோனட்ஸ் தயார் செய்து அதனை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். உங்கள் விருப்பப்படி அதன்மீது சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்து அதனை சுவைக்கலாம்.