பாலில் கலப்படம் இருப்பதை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்... இந்த 3 முறைகளை தெரிஞ்சிக்கோங்க
பாலில் இருக்கும் கலப்படத்தை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பால்
நமது அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றாக இருப்பது பால். பசும்பால், எருமைப்பால் ஆகிய மாட்டுப்பால்கள் கடைகளில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றது.
பால் மட்டுமின்றி மக்கள் பால் சார்ந்த பொருட்களையும் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். கால்சியம் சத்தை பெறுவதற்கு மிக முக்கிய பங்காக பால் இருக்கின்றது.
PONG-PHOTO9//GETTY IMAGES
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகுந்த பொருளாக பால் உள்ளது. ஆனால் பால் பண்ணைகளில் நேரடியாக வாங்குவதில் கலப்படம் அவ்வளவாக இருப்பதில்லை.
ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில் ஏகப்பட்ட கலப்படம் இருக்கின்றது. இவை ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில வழிமுறைகளை நாம் கடைபிடித்தாலே போதுமானதாகும்.
கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
பாலை குலுக்கினால் இதில் கலப்படத்தை கண்டுபிடிக்கலாம். ஒரு பாட்டிலில் பால் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனை 30 விநாடிகள் குலுக்கவும். அதில் அடர்த்தியான நுரை மேலே உருவாகி இருந்தால் டிடர்ஜென்ட் அதில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக அர்த்தம்.
KRISANAPONG DETRAPHIPHAT/GETTY IMAGES
பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள சிறிதளது பாலை எடுத்து வெற்று மேற்பரப்பில் விடவும். அது மெதுவாக, ஒரு வடிவத்துடன் சென்றால் தூய்மையான பால் என்று அர்த்தம். அதுவே விரைவாகவும், மெல்லியதாகவும் நன்கு விரிந்தபடி பரவினால் பாலில் தண்ணீர் கலந்துள்ளது என்று அர்த்தம்.
சோயா எண்ணெய்கள், யூரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள் ஆகியவற்றில் பால் தயாரிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிய ருசித்த பார்க்கவும். பாலில் கசப்புத்தன்மை இருந்தால் கலப்படம் இருக்கும் என்று அர்த்தம். விரல் நுனியில் சில துளிகளை பாலை எடுத்துக் கொண்டு, இரண்டு விரல்களை தேய்த்தால், பிசுபிசுப்பு தன்மை இருந்தாலும் கலப்படம் உள்ளது என அர்த்தம்.