நள்ளிரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? அலட்சியமாக இருக்க வேண்டாம்
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் அயர்ந்து தூங்கும் தருணத்தில் நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டு அதிக சிரமத்தை சந்திக்கின்றனர். இதற்கான சில மாற்றங்களை செய்யலாம்... அப்படி இல்லையெனில் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
பொதுவாக இரவு தூக்கம் என்பது ஒரு மனிதருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு நபரின் இரவு அயர்ந்த தூக்கம் என்பது 7 மணியிலிருந்து 8 மணி நேரம் இருக்க வேண்டும்.
நன்கு ஆழ்ந்த தூக்கம் என்றால் 7 மணி நேரம் போதுமானதாகும். ஆனால் சிலர் அயர்ந்த தூக்கத்தின் போது திடீரென விழித்துவிடுகின்றனர்.
பின்பு தூங்குவதற்கு அதிகமான சிரமத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும். அதற்கு பின்பும் தூக்கம் வரவில்லையெனில் மருத்துவரை அணுகவும்.
சிறந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
தூங்கும் நேரத்தினை மாற்றாமல் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
படுக்கையறையினை தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேலை செய்வது, ரிவி பார்ப்பது குறித்த அறையில் கூடாது.
மேலும் படுக்கையறை எப்பொழுதும் அமைதியாகவும், இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
பகலில் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
இடையே விழிப்பு ஏற்பட்டால் உடனே கடிகாரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் குறித்த அறையில் தூக்கம் வரவில்லையெனில் வேறு அறைக்கு சென்றுவிடவும்.
புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதை செய்யலாம். ஆனால் செல்போன் பார்ப்பது கூடாது.
நீங்கள் சோர்வாக உணர்ந்தால் மட்டுமே மீண்டும் படுக்கைக்கு செல்ல வேண்டும்.
தூங்குவதற்கு முன்பு ஆல்கஹால், காஃபின், கனமான உணவுகளைத் தவிர்க்கவும்.
யோகா பயிற்சி, தியானம் இவற்றினை மேற்கொண்டு மன அழுத்தம் இல்லாமல் சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள பழக்கங்களை மேற்கொண்டும் தூக்கம் வரவில்லையெனில் மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |