பறக்கும் விமானத்தில் நடந்த திருமணம்.. வைரலான புகைப்படத்தால் விமான ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்!
கடந்த நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த தம்பதிகள் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்களும், வீடியோகளும் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையை கோரிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகனான ராகேஷிற்கும், தொழிலதிபரின் மகள் தீக்சனாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது,.
இதன்படி, கொரோனா பரவல் காரணத்தினால் இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டனர். அதற்காக தனி விமானம் புக் செய்து 161 பயணிகளுடன் நடுவானில் விமானம் பறந்த நிலையில், மணமகன் தாலி கட்டினார்.
இதுசம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் விமர்சனம் எழுந்த நிலையில், திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 உறவினர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,அதற்கும் மேலான எண்ணிக்கையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி அரசின் கொரோனா தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், திருமணத்தில் பலரும் முககவசம் அணியாமல் பயணம் செய்துள்ளனர். இதனால், இந்த நிகழ்வு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து, திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், திருமணத்திற்கு பிறகு சொகுசு பயணத்திற்காக மதுரையை சேர்ந்தவர் புக் செய்ததாகவும், அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.
ஆனால், விமான ஊழியர்கள் அவர்களை பல முறை கண்டித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.