பாக்டீரியா, ஒட்டுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் Metronidazole மாத்திரைகள்
பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராகவும், ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும் METRONIDAZOLE பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண காய்ச்சல் மற்றும் சளி போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படாது.
H. pylori பாக்டீரியாக்களால் ஏற்படும் அல்சர் புண்களை குணப்படுத்தவும் METRONIDAZOLE பயன்படுகிறது.
எப்படி வேலை செய்யும்?
நோயினை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கண்டறிந்து அவற்றின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் கொன்று பாதுகாக்கிறது.
மூளை, செரிமான மண்டலம், குடல் இயக்கம், தோல் மற்றும் பிறப்புறுப்பு போன்றவற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
தலைவலி
உதடு உலர்ந்துபோதல்
நாவின் சுவை மாறுதல்
குமட்டல், வாந்தி
தசைவலி
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
சோர்வாக உணர்தல்
வலியுடன் சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி, ரத்தப்போக்கு, தொண்டை புண் போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
METRONIDAZOLE மாத்திரைகள் ஏடுத்துக்கொண்ட ஒரு மணிநேரத்தில் வேலை செய்யத் தொடங்கிவிடும், எனினும் 2 அல்லது 3 நாட்களில் நீங்கள் குணமானதை உணர்வீர்கள்.
கல்லீரல் நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
METRONIDAZOLE பயன்படுத்தும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பக்கவிளைவுகளை மோசமாக்கிவிடும்.
சிலநேரங்களில் நாவில் Metallic tasteயை உணர நேரிடலாம், இது பொதுவான பக்கவிளைவே, அந்நேரத்தில் அதிகளவு தண்ணீர் அருந்துவதும், பற்களை துலக்குவதும் தீர்வை தரலாம்.
Tinidazole போன்ற ஆன்டிபயாடிக்குகள் உங்களுக்கு அலர்ஜி என்றாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மிக முக்கிய கவனத்திற்கு
எந்தவொரு நோய்க்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
இதேபோன்று METRONIDAZOLE மாத்திரைகளையும் மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களை தவிர்த்து அதிக நாட்களோ அல்லது தொடர்ச்சியாகவோ METRONIDAZOLE எடுத்துக்கொள்ள வேண்டாம், ஏனெனில் இது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உணவுடன் அல்லது ஒரு டம்ளர் பால் அருந்திய பின்னர் METRONIDAZOLE மாத்திரைகளை பயன்படுத்தவும்.