பல்லி தொல்லைக்கு முடிவு கட்டனுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்
பொதுவாகவே அனைவரும் விரும்பாத உயிரினங்களின் பட்டயலில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. வீட்டின் அனைத்து அறைகளிலும், சுவர்களின் மீதும் ஊர்ந்துகொண்டு இருக்கும் பல்லியை பார்க்க சிலருக்கு பயம் சிலருக்கு அருவருப்பு.
ஆனால் பல்லியை கொல்லுவது பெரிய பாவம் என்று நம் பெரியோர்கள் கூறி வைத்திருக்கின்றார்கள்.அந்த பல்லி எப்போது எங்கு விழும் என்ற சந்தேகமும் பலருக்கு பீதியை உருவாக்கும். காரணம் பல்லி விழுவதை வைத்து சில நம்பிக்கைகளை பின்பற்றுவர்களும் இருக்கிறார்கள். எனவே, பல்லி இருக்கும் பகுதிக்கு பயந்து அங்கு வராமல் அவற்றை ஒழிக்க பல முயற்சிகள் எடுக்கப்பார்கள்.
இப்படி நம்மை தொல்லை செய்யும் பல்லியை எப்படி விரட்டுவதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருப்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம்... வீட்டல் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே பல்லியை வீட்டு பக்கமே வராதபடி செய்துவிடலாம்.
பல்லிகளை விரட்டும் வழிகள்
பல்லிகளைக் கொல்லாமல் எப்படி வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என்பதற்கான சில எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. எனவே, வீட்டில் அடிக்கடி பல்லிகள் காணப்படும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைக்கவும். பல்லிகளின் நடமாட்டம் நீங்க ஆரம்பிக்கும்.
ஆனால் முட்டை ஓடு வைத்தவுடனேயே பல்லிகள் வராது என எதிர்பார்ப்பது தவறு. முட்டை ஓடுகளை தொடர்சியாக ஒரு இடத்தில் பல்லிகள் கண்டால் பல்லிகள் குறித்த இடத்துக்கு வருவதை நிருத்திவிடுகின்றதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனையும் பல்லிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது . வீட்டின் மூலைகளில் அல்லது ஒரு டேபிள் ஃபேன் அருகில் இவற்றை வைத்து வீடு முழுவதும் அந்த வாசனையை பரவ விடலாம்.
வெங்காயம் மற்றும் பூண்டின் சாற்றை வீட்டில் பல்லிகள் அதிகளவில் திரியும் இடங்களில் தெளிப்பதன் மூலம் பல்லிகள் வீட்டில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாகும்.
மயில் இறகுக்கு பல்லிகள் பயப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பல்லிகள் நடமாடும் இடத்தில் மயில் இறகுகளை வைத்துவிட்டால் போதும் பல்லிகள் அந்த பக்கமே வராதாம்.
மிளகினை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனை பல்லி இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால், மிளகின் வாசனைக்கு பல்லிகள் அந்த இடத்திற்கு வராது. அது போன்ற விடயங்களை தொடர்சியாக பயன்படுத்துவதன் மூலம் பல்லி தொல்லைக்கு முற்றாக முடிவு கட்டலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |