ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் Metformin மாத்திரைகள்
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த Metformin மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
ஆன்டி டயாபடிக் மருந்துகளாக செயல்பட்டு, கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைப்பதற்கு மருந்தாகிறது.
மேலும் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
பக்கவிளைவுகள்
- வாந்தி
- மயக்கம்
- வயிற்றுப்போக்கு
- வாயுத்தொந்தரவு
பொதுவாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க Metformin மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது, இதனால் மாரடைப்பு போன்ற அபாயத்தை குறைக்கலாம்.
மற்ற ஆன்டி டயாபடிக் மருந்துகளுடன் சேர்ந்து உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம் என்பதால், எப்போதுமே சர்க்கரை நிறைந்த உணவுகளை வைத்திருப்பது பாதுகாப்பான ஒன்று.
தொடர்ச்சியாக வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Metformin மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டு ரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு, இதனால் தலைவலி, மயக்கம், உலர்ந்த தோல் போன்ற நிலை வரலாம்.
Metformin மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உங்களது ரத்த சர்க்கரை அளவையும், சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள்.
இதனால் உடல் எடை குறையத்தொடங்கலாம், எனினும் மருத்துவரின் அறிவுரை ஏதும் இல்லாமல் சுயமாக Metformin மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பெரும்பாலான நபர்களுக்கு Metformin மாத்திரைகள் தூக்க கலக்கம் போன்ற பக்கவிளைவுகளை உண்டுபண்ணுவதில்லை, சிறுநீரகம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் ஒரு சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
உணவுக்கு பின்னர் எடுத்துக்கொள்ளலாம், மாத்திரைகளை உடைத்தோ, கரைத்தோ சாப்பிட வேண்டாம், முழு மாத்திரைகளாக சாப்பிடவும்.
ஒருநாளைக்கு ஒருமாத்திரை என்ற பட்சத்தில் காலை உணவுடன் சாப்பிடவும், இரண்டு மாத்திரைகள் என்றால் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
மறந்தும்கூட வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாதீர்கள், இது பக்கவிளைவுகளை உண்டு பண்ணும்.