வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்யும் Methylcobalamin மாத்திரைகள்
வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய பயன்படுகிறது Methylcobalamin.
ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிக முக்கியமானது வைட்டமின் பி12.
இதன் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மற்றும் இன்னும் பிற நிலைகளுக்கு சிகிச்சையளிக்க Methylcobalamin பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- சொறி
- பசியின்மை
வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்யவும், ஏற்கனவே சேதமடைந்த நரம்புகள் சீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
Methylcobalamin மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ஆல்கஹால் பயன்படுத்த வேண்டாம்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, கர்ப்பத்திற்கு திட்டமிட்டாலோ அதுகுறித்தும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
மருந்துகளை எடுக்கத்தொடங்கிய பின்னர் மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுமையும் எடுத்துக்கொள்ளவும்.
உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக்கொள்ளலாம், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது பலனை தரும்.
ஒருவேளை சரியான நேரத்தில் மருந்தை எடுத்துக்கொள்ளத் தவறினால், ஒரேநேரத்தில் இரண்டு மருந்துகளை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குறிப்பு- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.