நீரிழிவு நோயாளிகளே! இன்சுலின் அளவை கடகடவென அதிகரிக்க இதை செய்தால் போதும்
இன்றைய நவீன காலத்தில் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் உணவு பழக்கங்கள் அதிகமாகவே மாறியுள்ளது. இதனால் நீரிழிவு நோய் மிகவும் எளிதாக மனிதர்களை தொற்றிக் கொள்வதுடன் ஆயுள் காலத்தையும் குறைத்து வருகின்றது.
எவ்வளவ வேகமாக ஓடி ஓடி வேலை செய்கிறார்களோ அதே வேகத்தில் மருத்துவமனைக்கும் ஏறி இறங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு சிறியவர் முதல் பெரியவர்கள் என அனைவரையும் நீரிழிவு நோய் தாக்கி வருகின்றது.
நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைப்பதற்கு வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதே போன்று வெந்தய கீரையும் நீரிழிவு பிரச்சினையில் முக்கியமாக பார்க்கப்படும் இன்சுலின் குறைபாட்டை நிவர்த்தி செய்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தயக் கீரையின் நன்மைகள்
வெந்தயக் கீரையில் கேலக்டோமன் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கும், ரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தை குறைப்பதுடன், இன்சுலின் உற்பத்தினையும் தூண்டுகின்றது. மேலும் பொட்டாசியம் சத்து் அதிகமாக இருப்பதால், இதய துடிப்பு, மற்றும் ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கின்றது.
வெந்தயக் கீரையில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனால் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும், சோடியத்தின் செயல்பாட்டையும் எதிர்த்து போராடுகிறது.
எலும்புகளை பலப்படுத்த வெந்தய கீரை பெரிதும் உதவி செய்கின்றது.