100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக ஆற்றல் மிக்க கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரகங்கள் இணைவதால் ஏற்படுகின்ற அரிய ராஜ யோகங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், . அறிவு, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமான புதனும், அன்பு, செல்வம், ஆடம்பரம் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் அதிபதியான சுக்கிரனும், ஜூன் 11, 2026 அன்று ஒரே நேரத்தில் நட்சத்திரப்பெயர்ச்சி அடைய போகின்றார்க்ள.
ஜோதிடக் கணிப்பின் பிரகாரம் புதன் ஜூன் 11 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசித்து, ஆகஸ்ட் 8 வரை அங்கேயே நிலைத்திருக்கும்; அதேவேளையில், சுக்கிரன் பிற்பகல் 2:11 மணிக்கு பூசம் நட்சத்திரத்திற்கு நகர்ந்து, ஜூன் 23 வரை அங்கேயே இருப்பார்.
குறித்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு குறித்த புதன் - சுக்கிரன் நட்சத்திர மாற்றம் சாதகமான முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த காலகட்டம் பல சிறப்பான பலன்களை வழங்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து மனநிம்மதியை அளிக்கும். நிதிநிலை மேம்படுவதால் பொருளாதார வளர்ச்சி சிறப்பான இருக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரித்து, குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு அமையும், இதுவரையில் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்

புதனின் - சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றியின் புதிய வாயில்களைத் திறக்கக்கூடும். குடும்ப உறவுகள் வலுப்பெற்று, நீண்டகாலமாக இருந்து வந்த மனக்கசப்புகள் குறையத் தொடங்கும்.
வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும், பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால் தொழில் ரீதியில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமான பலன்களை வழங்கும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விடயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தருவதால் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இதன் மூலம் வாழ்வில் அமைதியும் மன நிம்மதியும் உருவாகும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் தானாகவே அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |