புதன் பெயர்ச்சியில் அடித்த கோடீஸ்வர யோகம்... எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?
புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் மூன்று ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன் பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கின்றார். மேஷ ராசியில் ஆதிக்கம் செலுத்துவது செவ்வாய் ஆகும். இதனால் புத்தி கூர்மையுடனும், வேகமாகவும் செயல்படுவார்கள்.
இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு குபேர யோகம் ஏற்படும் நிலையில், அவை எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடகம்
கடக ராசியினரின் 10ம் வீடான கர்ம ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால், உங்களது நிர்வாக திறன் மேம்படுவதுடன், கடின உழைப்புக்கு ஏற்ற பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், தொழிலில் புதிய முதலீடுகளும் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை கிடைப்பதுடன், புதனின் முழுமையான பலனை பெறுவதற்கு பச்சைப்பயறு தானம் செய்வது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசியினரின் 9ம் வீட்டில் புதன் அமர்வதால் அதிர்ஷ்டத்தின் கதவு திறப்பதுடன், புதிய வேலைவாய்ப்பு தேடி வருகின்றது. வியாபாரத்திலும் திடீர் லாபம், நிலுவையில் இருந்த பூர்வீக சொத்து கை சேரும்.
வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறுவதுடன், ஆரோக்கியம் மேம்படுகின்றது. அதிர்ஷ்டத்தினை இன்னும் அதிகரிக்க புதன்கிழமையில் பசு மாடுகளுக்கு பச்சை புல் தானம் கொடுக்கலாம்.

மகரம்
மகர ராசியினரின் 4ம் வீட்டில் சுக ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால், இதுவரை இருந்த மன உளைச்சல் நீங்கி முழுமையான மனநிம்மதி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடுவதுடன், நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்து வேலைகள் முடிவுக்கு வரும்.
கலை மற்றும் படைப்பு துறையில் உள்ளவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைப்பதுடன், மேன்மையான பலனும் கிடைக்கும். இந்த பலனை மேலும் தொடர்ந்து பெறுவதற்கு புதன்கிழமையில் ஹயக்ரீவரை வழிபடுவது சிறந்த பலனளிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |