பூண்டு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியம் நிறைந்த பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள் நிறைந்த பூண்டு
நாம் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பூண்டில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி6, குறைந்த அளவில் வைட்டமின் ஈ மற்றும் கே, தாதுக்கள், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் என அதிகமாகக் காணப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிப்படுத்துவதுடன், சளி மற்றும் தொற்றுக்களை எதிர்க்க உதவுகின்றது. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இவற்றினைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தி, குடல் நலனைக் காக்கவும் செய்கின்றது.
இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பூண்டை அதிகமாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளவும்.

பூண்டை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
பொதுவாக பூண்டை இயற்கையாகவே ரத்தத்தினை மெலிதாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆதலால் ரத்தத்தினை மெலிதாக்கும் வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுப்பவர்கள் பூண்டை தவிர்க்கவும். ஏனெனில் இவை ரத்த கசிவு அபாயத்தினை அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சை செல்பவர்கள், அதற்கு முன்பாக அதிக அளவில் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் ரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்குமாம்.

அல்சர், நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும். குறிப்பாக பச்சை பூண்டு, இந்த பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்குகின்றது.

அதே போன்று குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பூண்டு சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும். ஏனெனில் பூண்டு ரத்த அழுத்தத்தினை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
பூண்டு சாப்பிட்டால் தோல் அரிப்பு, சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதே போன்று கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டு தாய்மார்கள் மருத்துவரை ஆலோசித்து எடுக்கவும்.

பூண்டை பச்சையாக தோலில் தடவுவது கூடாது. ஏனெனில் இவை தோல் எரிச்சல் மற்றும் ரசாயனக் கொப்புளங்களையும் ஏற்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |