தனுச ராசியில் பயணிக்கும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்கள்
பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களை அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், கிரக பெயர்ச்சிகளை கொண்டு ராசிகளின் நவகிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றை கணிக்கலாம்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக பார்க்கப்படுகின்றார்.
இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே இருக்கும். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். ஜனவரி 07 முதல் புதன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் சில ராசிகளின் பலன்களில் மாற்றம் ஏற்படவுள்ளது. அத்துடன் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.
1. தனுசு
தனுசு ராசியில் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இந்த மாற்றத்தால் உங்களின் ஆளுமை விருத்தியடையும். வேலைகளை முன்னரே திட்டமிட்டு செய்வீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். அத்துடன் வாழ்க்கை துணை பற்றிய சிந்தனை அதிகரிக்கும் அவர்களின் ஆசைகளுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள்.
2. மிதுனம்
7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார் என்பதால் மிதுன ராசிக்கு திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு நடக்கும் பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். அத்துடன் வாகனம், சொத்துக்கள் என வசதி வாய்ப்புகளுடன் வாழ்வீர்கள்.
3. கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் புதிதாக சொத்துக்களை வாங்கி சேர்த்து கொள்ளலாம். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலப்பகுதியில் வாழ்ந்து கொள்ளலாம். மருத்துவம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |