மீன ராசிக்குள் நுழையும் புதன்: இந்த 4 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் இனி பொன்னாகும்!
புதன் பகவான் ஏப்ரல் 11ம் தேதி மீன ராசிக்குள் பிரவேசிக்கும் நிலையில், எந்தெந்த ராசியினர் அதிக லாபத்தினை அடைவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒன்பது கிரங்களில் ஒன்றான புதன், தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகின்றார்.
ஏப்ரல் 11ம் தேதி குருவின் வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கப் போகின்றார். இதனால் சில ராசியினர் தொழில் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் அடைவார்கள்.

மீனம்
மீன ராசிக்குள் புதன் நுழைவதால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிப்பதுடன், அலுவலகத்தில் புதிய பொறுப்பு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தினை உணர்வீர்கள்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியினால் திடீர் பணவரவு கிடைப்பதுடன், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் யாவும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் தரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு வெளியே மற்றவர்களிடம் சிக்கிய பணம் தற்போது தடையில்லாமல் வ்நது சேரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் அழுத்தம் குறையுமாம்.

கடகம்
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் இந்த காலக்கட்டத்தில் வெற்றிகரகமாக முடியும் நிலை ஏற்படும். வெளிநாட்டிற்கு படிப்பு மற்றும் கல்விக்கு செல்ல நினைப்பவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். ஆன்மீக விடயத்தில் நாட்டம் அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள 4 ராசியினருக்கும் இந்த நேரம் சாதகமாக காணப்பட்டாலும், புதிதாக எந்தவொரு தொழிலுக்கு முதலீடு செய்வதாக இருந்தால் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லதாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |