பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலையானது ராசிபலன் கணிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
காரணம், கிரகங்களின் பெயர்ச்சியும், முக்கிய கிரகங்கள் இணைவதால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரன் மற்றும், மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் இணைவதால் மிகவும் சக்திவாய்ந்த வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
மார்ச் 26 ஆம் திகதி மேஷ ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகவுள்ள நிலையில், ஏப்ரல் 18 ஆம் திகதி மேஷத்துக்குள் சந்திரன் செல்வதால் உருவாகும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருப்பினும் நிதி ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசி டாப் 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் குறித்த சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகுவதால் இந்த ராசியினர் வாழ்வில் பல வழிகளிலும் சாதகமான திருப்பங்கள் உருவாகப்போகின்றது.
குறிப்பாக இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் ஏற்ப்படும். அதனால் மனநிலையில் தெளிவும் உட்சாகமும் பிறக்கும்.
இந்த காலகட்டத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். பல்வேறு வழிகளிலும் வருமான ஆதராங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சுக்கிரனின் ஆசியால் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆம் வீட்டில் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகுவதால், இவர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் தீரும்.
பணம் சம்பந்தப்படும் அனைத்து விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் நிலை உருவாகும். முன்னைய முதலீடுகளால் இரண்டிப்பு லாபம் கிடைக்கும் வாயப்பு காணப்படுகின்றது.
சுக்கிரன் ஆசியால் நிதி நிலையில் உச்ச வளர்ச்சியும், சந்திரன் ஆசியால் மனநிலையில் அமைதியும் உண்டாகும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் காணப்படுகின்றது.
கடகம்

கடக ராசியின் 10 ஆம் வீட்டில் இந்த வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசியினர் வாழ்வில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும்.
தொழிலில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சுக்கிரன் அருளால் இந்த காலகட்டத்தில் தொழில் இல்லாதவர்களுக்கும் கூட பெரிய தொகை பணம் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |