பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
வழக்கத்திற்கு மாறாக புதன் கும்ப ராசியில் நுழையும் போது அஸ்தமன நிலையில் நுழைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நாளை மறுதினம் புதன் கிரகம் கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். புதன் கும்ப ராசியில் உதயமாவதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அப்படியாயின் புதன் பெயர்ச்சியால் கடன் தொல்லையில் இருந்து வெளியில் வரப்போகும் ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சி

மேஷ ராசி
| - மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்லதாக இருக்கும்.
எந்தவித அலைச்சலும் இல்லாமல் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் சரியாக நடக்கும்.
இன்றைய நாள் புதிய முயற்சிகளை செய்யலாம்.
இறையருள் உங்களுக்கு இருப்பதால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வருவது குறைவாக இருக்கும்.
பண பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.
|
ரிஷபம் ராசி
| - ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று லாபம் அதிகமாக கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
கொடுத்த கடன் இன்றைய தினம் உங்கள் கைகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இப்படி ஏதாவது ஒரு வகையில் கையில் பணம் வந்து சேரும்.
வேலையில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
சுப காரியங்களுக்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
|
மிதுனம் ராசி
| - மிதுன ராசியில் பிறந்தவர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு மேல் வேலை செய்பவர்கள் உங்களை சார்ந்து பேசமாட்டார்கள்.
வீட்டில் இருக்கும் பிள்ளைகள், பெற்றவர்களை எதிர்த்து பேசக்கூடாது.
மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்த்து பேசக்கூடாது.
நீங்கள் செய்யும் சிறு தவறுகள் கூட மற்றவர்களை காயப்படுத்தலாம்.
எதிர்த்து பேசினால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
|
கடகம் ராசி
| - கடக ராசியில் பிறந்தவர்கள் இன்று போட்டியுடன் மற்றவர்களுடன் நடந்து கொள்வார்கள். எந்த வேலை செய்தாலும் அதில் போட்டி இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
உங்களுடைய மனம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். சரியாக வேலை செய்யும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கு பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
இந்த நாள் நிம்மதியும் சந்தோஷமும் சுறுசுறுப்பும் உற்சாகமும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும்.
|
சிம்மம் ராசி
| - சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது. நீண்ட் நாட்களாக இருந்த சிக்கல்கள் இன்றுடன் முடிவுக்கு வரும்.
உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
|
கன்னி ராசி
| - கன்னி ராசியில் பிறந்தவர்கள் இன்று முதல் நல்லது மட்டுமே நடக்கும்.
புதிய முயற்சிகள் வெற்றியை உங்களுக்கு கொடுக்கும்.
வேலைச் செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
மற்றவர்கள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.
எதிரிகள் கூட நண்பர்களாக மாறக்கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது.
கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
|
துலாம் ராசி
| - துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற மன சஞ்சலங்கள் குறையும். சிந்தித்து ஏற்பட வேண்டும் என பலரும் உங்களிடம் கூறுவார்கள்.
இந்த நாள் இறுதியில் தேவையற்ற டென்ஷனை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த நாள் துவங்கும் போதே மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்துபவர்கள் தப்பித்துக் கொள்வீர்கள்.
|
விருச்சிகம் ராசி
| - விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அலட்சியத்துடன் வேலைகளை செய்யக் கூடாது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
மேலதிகாரிகளாக இருந்தால் ஆவணங்களை படித்து விட்டு கையொப்பம் இட வேண்டும். ஏனெனின் வீண் பிரச்சினைகள் உங்களை சார்ந்து வரலாம்.
பணப்பரிவுரதனையில் கவனமாக இருக்கவும். தெரியாத மூன்றாவது நபருக்காக உதவி செய்வதை தவிர்க்க வேண்டும்.
|
தனுசு ராசி
| - தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறிய பிரச்சினைக்கு கூட கவலையாக இருப்பார்கள்.
சிறந்த நண்பர்களை உங்கள் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.
தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. வெற்றியை நோக்கி துணிந்து பயணம் செல்வது இன்றைய நாளை உங்களுக்கு இனிமையாகி தரும்.
|
மகரம் ராசி
| - மகர ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நகர்த்திச் செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் கிடைக்கும். சம்பள உயர்வோடு சில பேருக்கு பிரமோஷன் வாய்ப்புகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
|
கும்பம் ராசி
| - கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கான அந்தஸ்து உயரும். சொத்து சுகம் சேரும். வாழ்க்கையில் உயர்ந்த மனிதர் என்ற பதவியை பெறுவீர்கள். உங்களை கௌரவ படுத்த பாராட்டுகளும் நடக்கும். பரிசுகளும் கொடுக்கப்படும். அந்த அளவுக்கு இன்று சுபிட்சமான நாளாக இருக்கும்.
|
மீனம் ராசி
| - மீன ராசியில் பிறந்தவர்கள் அடுத்தவர்களுக்கு அதிகமாக உதவி செய்வார்கள். மன நிறைவுடன் நடந்து கொள்வார்கள்.
வேலையில் ஏதாவது பிரச்சினை வந்தால் அந்த இடத்தில் இருந்து விலகி விடுவார்கள்.
நீண்ட தூர பயணத்தின் மூலம் சின்ன சின்ன அலைச்சல்கள் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).