சாய்ரா பானுவுக்கு நடந்த அறுவை சிகிச்சை- மற்றுமொரு அறிக்கையால் மகிழ்ச்சியான ரசிகர்கள்
சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர் ரகுமான்
தென்னிந்திய சினிமாவில், மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வருபவர் தான் ஏ.ஆர் ரகுமான்.
இவர், இசையில் வெளிவரும் பாடல்களுக்கு பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கிறார்கள்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரிவதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து, பிரபல வழக்கறிஞரான வந்தனா ஷா வெளியிட்ட அறிக்கையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் மும்பையில் தங்கியிருப்பதாக சாய்ரா பானு தெரிவித்தார் .
அறுவை சிகிச்சை குறித்தான அறிக்கை
இந்த நிலையில் சாய்ரா பானுவுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கை, “சில நாட்களுக்கு முன்பு திருமதி சாய்ரா ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த சவாலான நேரத்தில் அவர் முழுமையாக குணமடைந்து வருவதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவருக்காக நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |