புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!
நவகிரகங்களில் புதன் கிரகம் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம், பகுப்பாய்வுத் திறன் மற்றும் புத்திக்கூர்மைக்கு அதிபதியாகக் கருதப்படுகிறது. அதேபோல், செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், செயல்திறன் மற்றும் மன உறுதியின் அடையாளமாக அறியப்படுகிறது.
இந்த இரண்டு முக்கிய கிரகங்களும் ஜூலை 16ஆம் தேதி இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளன. ஜோதிட நம்பிக்கையின்படி, இந்த சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை படைப்பாற்றலை அதிகரிப்பதுடன், புதுமையான சிந்தனைகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

தற்போது, புதன் கிரகம் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறது. அதே நேரத்தில், செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறது.
இந்த இரு கிரகங்களின் நிலை மற்றும் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அப்படி இந்த அரிய சேர்க்யைால் பலனடையும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ரிஷபம்

ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பதால் தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பணப் பிரச்சினைகள் குறைந்து, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.
கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். விரும்பிய வாகனம் வாங்கும் வாய்ப்பும், மாணவர்களுக்கு தேர்வில் நல்ல முடிவுகளும் கிடைக்கலாம்.
சிம்மம்

இந்த யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும், புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். நிதிநிலை சீராக இருக்கும். துணையுடன் நல்ல நேரம் செலவிட்டு, பழைய கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக நிதி நிலையில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை வழங்கும். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.குடும்பத்தவரின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |