வக்ர நிலையிலிருந்து மீண்ட புதன்... பணம், பதவி என அதிர்ஷ்டம் பெறும் ராசி யார் யார்?
வக்ர நிலையிலிருந்த புதன் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளதால், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுமாம்.
நேர்கதியில் புதன்
ஜோதிடத்தில் புதன் கிரகமானது அறிவு, பேச்சுத் திறன், தொழில், வியாபாரம் இவற்றினை கட்டுப்படுத்துவதாக கருதப்படுகின்றார். கடந்த சில வாரங்களாக வக்ர நிலையிலிருந்த புதன் 2026ம் ஆண்டு மீண்டும் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் சில ராசியினரின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினருக்கு இந்த மாற்றம் பல புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்தினையும் அளிக்குமாம். ஆனாலும் எந்த முடிவையும் கவனமாக எடுப்பது நல்லது.

மிதுனம்
புதனின் ஆதிக்க ராசியாக இருக்கும் மிதுனமானது இந்த நிலையினால் பல நன்மையினை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் மீண்டும் வேமாக முடியும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரமும் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் குறையும்.
புதிய முதலீடு குறித்து யோசிப்பீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுப்பது மிகவும் நல்லது. கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்கு புதனின் இந்த நிலையினால் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பாத்திருந்த பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு பயணம் அல்லது புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக மாறும்.
ஆனாலும், பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு கூட ஏற்பட வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு புதனின் இந்த மாற்றத்தால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், புதிய நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் உருவாகும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள், திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். சொத்து தொடர்பான விடயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
பணவரவு அதிகரித்தாலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். குடும்பத்துடன் நேரத்தினை செலவு செய்வதால் உறவுகள் வலுப்படும்.
இவ்வாறு பலன்கள் காணப்பட்டாலும் எந்தவொரு முடிவையும் முழுமையாக ஜோதிடத்தினை நம்பி எடுக்கக்கூடாது. குறிப்பாக பணம் மற்றும் குடும்ப தொடர்பான முடிவுகளை அனுபவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையைக் கொண்டு தான் எடுக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |