மேஷத்தில் அஸ்தமிக்கும் புதன் : இந்த ராசிகளுக்கு மே மாதம் முழுவதும் துரதிஷ்டம் தானாம்!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக பெயர்ச்சி, கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்கள், முக்கிய கிரகங்களின் உதயம், அஸ்தமனம் ஆகின 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும்.
அந்தவகையில், கிரகங்களின் இளவரசரான புதன் மேஷ ராசிக்கு இடம்பெயர்ச்சி யடைந்து அஸ்தமன நிலையிலேயே அடுத்த 27 நாட்கள் பயணிக்கவுள்ளார்.

அதன் தாக்கமானது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதே நேரம் சில ராசிகளின் வாழ்வில் மிகுந்த துரதிஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
அப்படி புதன் மேஷத்தில் அஸ்தமிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, பொருளாதாரம் என பெரும் சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக பெயர்ச்சியானது வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் பாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.
இவர்களின் நிதி நிலையில் பாரிய சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.தொழில் விடயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது சிறிய வாய் தகராறுகள் கூட பெரிய மோதல்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குறித்த புதன் அஸ்தமன காலகட்டம் மிகவும் சவாலானதாகவும் வாழ்வில் பல பிரச்சினைகளை உருவாக்கும் வகையிலும் அமையப்போகின்றது.
இவர்கள் இந்த நேரத்தில் புதிய தொழில் முயற்ச்சிகள் பெரிய முதலீடுகள் என்பவற்றை தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு அடுத்த 27 நாட்கள் பல பெரும் சவாலானதாக அமையப்போகின்றது.
தொழில் ரீதியில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பணத்தை கையாளும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனமானது பொருளாதார நிலையில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.
நீண்ட கால கடன் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். கடன் கொடுத்தோரிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
புதிய முதலீடு செய்பவர்களும் அடுத்த 27 நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எந்தவொரு வேலையையும் அவசரமாக செய்வதால் பாரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |