3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் கிரகங்களின் இணைவால் உருவாகும் அரிய ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடதக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் மே மாதத்துக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்த மாதத்தில் புதன், செவ்வாய், சூரியன் ஆகிய ஆற்றல் வாய்ந்த கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றப்போகின்றது.
அதன் தாக்கமானது எல்லா ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட சாத பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு பல மாதங்களாகவே தொழில் ரீதியாக நிலவிவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இவர்களின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகப்போகின்றது. சூரிய பகவானின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான யோகம் கூடிவரும்.
பெரிய தொகை பணம் கைக்குவரும் யோகம் காணப்படுகின்றது. எனவே இந்த காலகட்டத்தில் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது மிகுந்த நிதானம் தேவை.
சிம்மம்

மே 2026 மாதத்தில், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் அமோக முன்னேற்றம் காண்பார்பதர்கள்.
நீண்ட காலமாகவே பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.
ராசிபலன் கணிப்பின் பிரகாரம் வேலையில் உள்ள சிம்ம ராசிக்காரர்கள் பதவி உயர்வுகள், தலைமைப் பொறுப்புகளை பெறுவார்கள். சம்பள உயர்வை பெறவும் அதிக வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்ளுக்கு வருகின்ற மே மாதம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பலவகையிலும் சாதக நன்மைகள் கிடைக்கப்போகின்றது.
இவர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால கடன் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகள் திறக்கும்.
புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் திறக்கும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில் லாபம் ஈட்டுவதற்கான வாப்பு உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |