மரணத்தை முன் கூட்டியே கணித்து உயிரிழந்த நபர் - காரணம் என்ன?
அமெரிக்காவில் வாஷிங்கடன் டி.சி. நகரில் உள்ள கோர்ட் கட்டிடத்தில் கடந்த நாட்களுக்கு முன்பு திடீரென ஒருவர் தன்னை தானே தீ வைத்துக்கொண்டார். உடனே தகவலறிந்த போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர், யார் என விசாரிக்கையில், கொலராடோ மாகாணத்தின் போல்டர் பகுதியை சேர்ந்த அவரின் பெயர் புரூஸ் (50) என தெரியவந்துள்ளது.
இவர், பேஸ்புக் பக்கத்தில் தன்னை வின் புரூஸ் ஒரு புத்த மதத்தினை சேர்ந்தவர் என்றும் பருவகால செயற்பாட்டாளர் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரிலேயே பேஸ்புக் பதிவு ஒன்றில் தீ பற்றிய எமோஜி ஒன்றையும், 4/22/2022 என்ற அவரது மரண நாளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாரதியை நான் மறந்துவிடுகிறேன்! பிக்பாஸ் பாணியில் ரேகா போட்ட திட்டம்
மேலும், இதுபற்றி புத்த மத சங்கத்தின் பெண் சாமியாரான டாக்டர் கிரித்தீ கூறும்போது, புரூசை எனக்கு தெரியும். அவர் என்னுடைய நண்பர்.
இது தற்கொலை அல்ல. பருவகால நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் மேற்கொண்ட இரக்கத்துடன் கூடிய அச்சமற்ற செயல் என்று தெரிவித்து உள்ளார்.
பருவகால நெருக்கடி பற்றிய தகவலை நாங்கள் ஒன்றாகவே சேகரித்து வந்தோம். ஆனால், இந்த செயலை செய்வதற்கு புரூஸ், கடந்த ஓராண்டாக திட்டமிட்டு வந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.