ஆண்களுக்கு தினமும் 2 ஏலக்காய் சாப்பிட்டால் போதும்! இனி அந்த நோய் கிட்டயே நெருங்காதாம்....!
இந்திய இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது.
பல் துலக்கிய பிறகும் பலருக்கு துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தின் சிக்கலை நீக்க பல வகையான வாய் புத்துணர்ச்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பயனில்லை. உங்கள் சுவாசத்தின் வாசனையை நீக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் உணவு சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிடுங்கள்.
இதைச் செய்வதன் மூலம், உங்கள் சுவாசத்திலிருந்து வரும் துர்நாற்றம் நீங்கும். மேலும், ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை அல்லது நீண்ட நேரம் செயல்பட முடியவில்லை எனில் அவர்களுக்கு இயற்கை வைத்தியங்களில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், பச்சை ஏலக்காய், ஒரு துண்டு இஞ்சி, கிராம்பு, மூன்று நான்கு துளசி இலைகள் கலந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை சாப்பிடுங்கள். இப்படி செய்வதன் மூலம், தொண்டை புண் மாறிவிடும்.